Trending News

பிணைமுறி ஆணைக்குழு மற்றும் பாரதூரமான மோசடிகள் பற்றிய விசாரணை அறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில்

(UTV|COLOMBO)-மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் பற்றி விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையும், பாரதூரமான ஊழல் மோசடிகள் பற்றி விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

 

இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடத்தப்பட்ட விசேட கட்சித்தலைவர் கூட்டமொன்றில் தீர்மானிக்கப்பட்டது.

பிணைமுறி அறிக்கை தொடர்பில் பெப்பரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று கூடும் கட்சி தலைவர்வர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி விசாரணை அறிக்கை வழங்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நேற்று  செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டிருந்தார்.
இதற்காமைவாக இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவது தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Jayalalithaas Niece Deepa Jayakumar, Her Lookalike, Set For Political Debut

Mohamed Dilsad

JO’s Mass Protest in Colombo Today

Mohamed Dilsad

“No need to panic,” Police urge public

Mohamed Dilsad

Leave a Comment