Trending News

காதலனை வீட்டுக்கு அழைத்த காதலி..! காதலனுக்கு நேர்ந்த பரிதாப நிலை

(UTV|COLOMBO)-அவிசாவளையில் காதலியின் வீட்டை தேடி மாற்று வழியில் சென்று கொணடிருந்த இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காதலன் கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டப்பட்டு, காயப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்துள்ள காதலன் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காதலன் பாதுக்க பிரதேசத்தினை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காதலன் அவிசாவளையிற்கு வாடகை முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

இதற்கமைய, இரவு நேரம் காதலி வழங்கிய முகவரிக்கமைய மாற்று வழியில் காதலன் சென்று கொண்டிருந்துள்ள போது, யாருமற்ற வீதியில் வைத்து காதலனை கொடூரமாக தாக்கி கைபேசியை பறித்து சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவிசாவளை காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Andy Murray returns from injury against Roger Federer in charity match

Mohamed Dilsad

எரிபொருள் விலையில் மாற்றம்- நிதி அமைச்சு

Mohamed Dilsad

உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment