Trending News

சுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் – வீடியோ

(UTV|SWEDEN)-சூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் சூரிய ஒளிவட்டம் தெரியும். ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும்.

இந்நிலையில், சுவீடனில் தெரியும் சூரிய ஒளிவட்டத்திற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. அதில், இந்த ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது பனித்துளியானது காற்றில் உறைந்து இருக்கும். அது மிகச்சிறிய லென்சாக செயல்படும். சிறிய, சமதளமான, அறுங்கோண பனிக்கட்டிகள் காற்றில் இருக்கும். அதன் மீது சூரிய ஒளி படும் போது ஒளியானது பல்வேறு கோணங்களுக்கு எதிரொளிக்கப்படும். இந்த ஒளிவட்டமானது பனிக்கட்டியின் வடிவத்தை பொறுத்து மாறுபடும்.

இது போன்ற ஒளிவட்டம் நிலா வெளிச்சத்திலும் ஏற்படும். ஆனால் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஒளிவட்டம் சரியாக தெரியாது. சூரியன் அல்லது சந்திரனால் ஏற்படும் ஒளிவட்டத்தில் நடுவிளிம்பு கூர்மையாகவும், வெளியில் இருக்கும் விளிம்பு விரிவடைந்தும் காணப்படும்.

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Muslim Congress not to support 20th Amendment

Mohamed Dilsad

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார்

Mohamed Dilsad

හිටපු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතාගෙන් විශේෂ ප්‍රකාශයක්

Editor O

Leave a Comment