Trending News

ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிக்கும் அனிருத்?

(UTV|INDIA)-சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த ‘இந்தியன்’ படம் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. `இந்தியன்-2′ படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2′ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்த பல படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருவதால், அவரால் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க முடியாத நிலைய ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படத்திற்கு அனிருத்தை இயக்குநர் சங்கர் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

A haul of ammo recovered at Pudukudirippu area

Mohamed Dilsad

மட்டக்களப்பு நோக்கிய புகையித போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

Mohamed Dilsad

21 Athletes linked to blood-doping probe

Mohamed Dilsad

Leave a Comment