Trending News

உயரம் பாய்தலில் தங்கபதக்கத்தை வென்றார் காவியா

(UDHAYAM, COLOMBO) – தடகளத் தொடரில் பெண்களுக்கான 14 வயதுப் பிரிவு உயரம் பாய்தலில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தை சேர்ந்த கே.காவியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டியில் கே.காவியா 1.32 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி ஆர்.டிலக்சனா வெள்ளிப் பதக்கத்தையும், பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஆர்.நிலாவாணி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரவி கருணாநாயக்கவுக்கு மீளவும் நீதிமன்ற அழைப்பாணை

Mohamed Dilsad

SL Vs IND 3rd ODI – Sri Lanka 215 all out

Mohamed Dilsad

மரம் ஒன்றின் அருகாமையில் இருந்து வெடி குண்டுகள் மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment