Trending News

ஹட்டன் டிக்கோயா குப்பையை கொண்டு பசளை ( கொம்பஸ்) தயாரிக்க இடம் தெரிவு செய்யும் விசேட கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடமொன்றை தெரிவு செய்வதற்கன விசேட கலந்துரையாடல் ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் 23.06.2017 நடைபெற்றது

நுவரெலியா மாவட்ட உதவி செயலாளர் பீ.ஏ.சரத் பிரேமச்சந்திர தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் போது நரசபைப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதக்கான இடத்தினை தெரிவு செய்வதை விட சேகரிக்கப்படும் குப்பைகளை கொம்பஸ் பசளை தயாரிப்பதக்கு பெருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும் என தீர்மாணிக்கப்பட்டது

இதன் போது   ஹட்டன்  நகரை அன்மித்த பகுதியில் 5 இடங்கள்  இனம்காணப்பட்டுளளது இவ் இடங்களில் பொருத்தமான ஒர் இடத்தினை  நகரசபைக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு வாரப்பகுதிக்குள்ள அறிக்கை தயாரித்து சமர்பிக்க நடவடிக்கை எடுக்க தீர்மாணிக்கப்பட்டது

கலந்துரையாடலின் போது ஹட்டன் டிக்கோயா நகரசபையின் செயலாளர் எஸ்.பிரியதர்ஷினி ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராம். அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

குறைவடைந்துள்ள மரக்கறிகளின் விலை

Mohamed Dilsad

Seventy-seven linked to Easter attacks in CID’s custody; 25 in TID

Mohamed Dilsad

නේපාල ගුවන් යානයක් අනතුරකට ලක්වෙයි

Editor O

Leave a Comment