Trending News

பொதுநலவாய ஒன்றியம் மற்றும் ஆசிய விளையாட்டிற்கு தயாராகும் இலங்கை

(UDHAYAM, COLOMBO) – 2018ம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய ஒன்றியம் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிக்காக இலங்கை அணியை தயார் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

25 விளையாட்டு சங்கங்களை சேர்ந்த அதிகாரிகள் இதுதொடர்பாக விளையாட்டு துறை அமைச்சர் தயசிறி ஜயசேகரவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் அனைத்து தெரிவுகளையும் மேற்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளையாட்டுத்துறை பிரதிநிதிகள் அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர்.

வெளிநாட்ட பயிற்றுவிப்பாளரை அழைத்தல் தேவையான உபகரணங்கள் மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Australia’s Smith marks Test comeback with Ashes century

Mohamed Dilsad

2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்

Mohamed Dilsad

புஸ்ஸல்லாவ அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத கோவில் முத்தேர் பவணி

Mohamed Dilsad

Leave a Comment