Trending News

கடும் நிபந்தனைகளுக்கமைய இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ள தீர்மானம்!

(UDHAYAM, COLOMBO) – கடும் நிபந்தனைகளுக்கமைய இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழக கடற்தொழிலாளர்கள் மீண்டும் எல்லைத்தாண்டக்கூடாது என்ற நிபந்தனைக்கு அமையவே குறித்த படகுகள் விடுவிக்கப்படவுள்ளன.

இதற்கமைய, இலங்கை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட படகுகள், அவை கைப்பற்றப்பட்ட காலத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளன.

முதலில் 2015ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 42 படகுகள் விடுவிக்கப்படவுள்ளன.

ஏனைய படகுகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் கடற்தொழில் அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வடமாகாண மீனவர்கள் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Low student turnout at schools today

Mohamed Dilsad

கெசெல்வத்த தினுகவின் உதவியாளரொருவர் கைது…

Mohamed Dilsad

மட்டக்களப்பு நோக்கிய புகையித போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

Mohamed Dilsad

Leave a Comment