Trending News

டயகமவில் மாணவி ஒருவரை நபரொருவர் பலாத்காரம் செய்யமுற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – டயகமவில் மாணவி ஒருவரை நபரொருவர் பலாத்காரம் செய்யமுற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு

டயகம மோனிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலைக்குச் செல்லும் வழியில் நபரொருவரால் பாலியல் ரீதியான பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் குறித்து உரிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்ட மாணவியின் தாயார் இன்று டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை கொடுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேற்கொண்டார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :

13 ஆம் திகதி இடம் பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த மாணவி எவ்விதமான பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று வைத்தியர்கள் குறிப்பிட்ட மாணவியின் தாயாருக்கு அறிவித்துள்ளனர். இந்த நிலையில் பாடசாலை மாணவியுடன் பலாத்காரம் செய்ய முற்பட்ட சந்தேக நபர் நேற்று 14 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 ஆம் திகதி பிரதேச பாடசாலை மாணவர்களும் ஏனையவர்களும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். இவ்வாறானதொரு நிலையில் சந்தேக நபர் உடனடியாக விடுவிக்கப்பட்டது தொடர்பில் தமது அதிருப்தியை தெரிவித்து இன்று 15 ஆம் திகதி பிரதேச மக்கள் டயகம நகரில் மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். பல மணி நேரம் இடம் பெற்ற இந்தப்போராட்டத்தினால் டயகம நகரூடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப போராட்டம் இடம் பெற்ற இடத்துக்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் நேரடி விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன் போது போராட்டக்காரர்களுடன் அவர் கலந்துரையாடிய போது இந்தச்சம்பவம் தொடர்பில்  பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடமிருந்து டயகம பொலிஸினால் முறையான வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லையென தெரியவந்தது. இவ்விடயம் தொடர்பில் டயகம பொலிஸாரிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்துக்கொண்ட மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உடனடியாக பெற்றோரின் முறைப்பாட்டை பதிவு செய்து கொள்ளுமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டார்.

இதன் பின்பு போராட்டக்காரர்களுடன் டயகம பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மாணவியின் தாயாரிடமிருந்து பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

இதன் போது ஏனைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் சமுகந்தந்திருந்தனர்.
மாணவியின் தாயார் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தனது மகளுடன் நுவரெலியா வைத்தியசாலையில் இருந்த போது மூன்று இளைஞர்கள் வருகை தந்து தொலைபேசியிலுள்ள இளைஞனொருவனின் படமொன்றைக் காட்டி  இந்த இளைஞனா பலாத்காரம் செய்யமுற்பட்டார் என்று கேள்வி எழுப்பிய போது தனது மகள் ஆம் என்று கூறியதாகவும் பின்பு தொலைப்பேசியயை முகத்துக்கு முன்னால் பலமுறை கொண்டு வந்து இவரா ? இவரா ? என்று அச்சுறுத்தியதாகவும் இதன் போது தனது மகள் குறிப்பிட்ட நபரை அழைத்து வந்தால் நேரடியாக அடையாளம் காட்டி முடியுமென்றும் பொலிஸாருக்குத் தெரியபடுத்தியுள்ளார். எனவே இந்த மூன்று இளைஞர்களுடன் சந்தேக நபரையும் கைது செய்து உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப்பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் திருப்தி கொண்ட போராட்டக்காரர்கள் படிப்படியாக தமது போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.

இதே வேளை இந்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் டயகம பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
​நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

ஜெனீவா சென்றதன் இரகசியம் என்ன?

Mohamed Dilsad

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

Mohamed Dilsad

“Deputy, State Ministers to sworn-in today,” Akila says

Mohamed Dilsad

Leave a Comment