Trending News

ஜனாதிபதியை சந்தித்த இந்தியப் பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராபோசன விருந்தில் இந்தியப் பிரதமர் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ் விசேட அறிவிப்பு

Mohamed Dilsad

மாபோல நகரசபையினால் வீடுகளில் அகற்றப்படும் கழிவுப்பொருட்கள் கொள்வனவு

Mohamed Dilsad

Adverse Weather: Death toll climbs to 16, 1 missing, 127,913 persons

Mohamed Dilsad

Leave a Comment