Trending News

கள்ளக்காதலால் நடுத்தெருவில் பிரபல சின்னத்திரை நடிகை அடிதடியில் …காணொளி

(UDHAYAM, COLOMBO) – வாணி ராணி தொடரில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சபீதாராய் பண விவகாரத்தில் நடுத் தெருவில் நள்ளிரவில் அத்தொடரை தயாரித்து வரும் நிறுவனத்தின் மேலாளர் சுகுமாறனுடன் அடிதடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்திருநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் வாணி ராணி தொடரை தயாரிக்கும் நிறுவன மேலாளர் சுகுமாறன்.

அவரது மனைவி குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றுள்ளார்.

இந்த நிலையில் வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராயுடன் சுகுமாறன் கடந்த 2 நாட்களாக தமது வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் பணம் தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இதில் சுகுமாறன், சபீதா ராயை வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகை சபீதா ராய், சுகுமாறனின் வீட்டு வாசலிலேயே நின்று சண்டையிட்டுள்ளார்.

“நீ அழைத்ததாலேயே தான் வந்தேன், பணம் கொடுக்கிறேன் என்று சொன்னாயே என்ன ஆனது.

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு வரச்சொன்னீல்ல” என்று கேட்டு சுகுமாறன் பேசிய காணொளி ஆதாரத்தை காட்டி மிரட்டியுள்ளார்.

ஆத்திரத்தில் வசைபாடிய சபீதாராயை சுகுமாறன் கொன்றுவிடுவேன் என்று மிரட்ட இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதில் சுகுமாறன் சபீதா ராயின் தலைமுடியை இழுத்து போட்டு அடிக்க, பதிலுக்கு சுகுமாறனின் சட்டையை கிழித்து தாக்கியுள்ளார் சபீதா ராய்.

சின்னத்திரையை சேர்ந்த இருவரும் நடுத்தெருவில் நள்ளிரவில் சண்டைபோட்ட கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து வளசரவாக்கம் பொலிசார் சுகுமாறன் வீட்டுக்கு வந்து இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

வாணி ராணி தொடர் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

இத் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் வரும் சபீதா ராய், கூட இருந்தே குழி பறிப்பது, ஒருவர் பற்றி மற்றொருவரிடம் போட்டு கொடுத்து கோள் மூட்டுவது, குழந்தை கடத்தல் உள்ளிட்ட செயல்களை செய்யும் கதாபாத்திரத்தில் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

[ot-video][/ot-video]

Related posts

UN releases $9.2 million in emergency funds for Venezuela

Mohamed Dilsad

இந்திரஜித் குமாரசாமி பதவி விலகுகிறார்

Mohamed Dilsad

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை.

Mohamed Dilsad

Leave a Comment