Trending News

சீஸ் பிஸ்கெட் செய்வது எப்படி?

(UTV|COLOMBO) – குழந்தைகளுக்கு பிஸ்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சீஸ் பிஸ்கெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மா- 1 கப்,
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
துருவிய சீஸ் – 1/4 கப்,
வெண்ணெய் – 1/4 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு – 1 சிட்டிகை,
பால் – 1½ டேபிள் ஸ்பூன்.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடர், துருவிய சீஸ், வெண்ணெய், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுத்து அதில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை உள்ளங்கையால் 1/4 இன்ச் தனத்திற்கு தட்டி பிஸ்கெட் கட்டரால் வெட்டி வைக்கவும்.

கடைசியாக வெண்ணெய் தடவிய செய்து வைத்த பிஸ்கெட்டை ட்ரேயில் அடுக்கி 1800C சூட்டில் ஓவனில் 10 நிமிடம் பேக் செய்து எடுத்து பரிமாறவும்.

சுவையான சீஸ் பிஸ்கெட் ரெடி.

Related posts

Maj. Gen. Shavendra Silva’s service extended

Mohamed Dilsad

‘பூ’ என பெயரிடப்பட்ட உலகின் அழகிய நாய் பலி

Mohamed Dilsad

රත්‍රං මිල ඉහළ ට

Editor O

Leave a Comment