Trending News

கொழும்பின் பல பகுதிகளில் இன்றும் நீர் வெட்டு

(UTV|COLOMBO) – கொழும்பின் பல பகுதிகளில் இன்று(12) இரவு 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் கொழும்பு 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படும் என குறித்த இந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கொழும்பு 5 மற்றும் 6 பகுதிகளில் குறைந்தழுத்த நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

Several spells of light showers expected

Mohamed Dilsad

Canada deeply concerned by violence in Sri Lanka

Mohamed Dilsad

Twitter urges all users to change passwords after glitch

Mohamed Dilsad

Leave a Comment