Trending News

சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

(UTV|COLOMBO) – கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி இன்று(10) மூன்றாவது நாளாகவும் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இதனிடையே, சுவிஸ் அதிகாரியிடம் நேற்று இரண்டாவது நாளாக 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அவர் மீண்டும் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் நேற்று மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் இன்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியிடம் மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளியால் 23 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Ravinatha Aryasinha reappointed as Foreign Secretary

Mohamed Dilsad

Premier reschedule Presidential Commission summons

Mohamed Dilsad

Leave a Comment