Trending News

கழுத்து பகுதியில் கருப்பாக இருப்பதனை போக்க இதை ட்ரை பண்ணுங்க

(UTV|COLOMBO) – சிலருக்கு கழுத்து பகுதி கருப்பாக இருக்கும். இதனை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.

சிலருக்கு கழுத்து பகுதி கருப்பாக இருக்கும். ஒருசில ஹார்மோன்கள் குறைபாடு, அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் அல்லது வெள்ளி மாலை அணிவது போன்ற காரணங்களால் கழுத்து கருப்பாக மாறுகிறது.

இதனை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை கொண்டு எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்தம் மாவு கலந்து கருப்பாக உள்ள இடத்தில் லேசாக மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருப்பு சிறிது சிறிதாக மறைவதை பார்க்க முடியும்.

தயிரை கையில் எடுத்து கழுத்து பகுதியில் மெதுவாக தேய்த்து ஊறவைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து சுடுதண்ணீரில் கழுத்து பகுதியை அழுத்தி துடைக்கவும். இவ்வாறு செய்வதாலும் கழுத்தில் இருக்கும் கருப்பு மறையும்.

வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு மூன்றையும் சம அளவு கலந்து பால் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனை மைபோல் குழைத்து கருப்பாக உள்ள இடத்தில் தேய்த்து பின்னர் கழுவினாலும் இந்த கருமை நீங்கும்.

Related posts

Navy arrests 13 persons engaged in illegal fishing

Mohamed Dilsad

இலங்கை அரச தூதுக்குழு இன்று ஜெனிவா பயணம்

Mohamed Dilsad

පොල් හිඟයට එක හේතුවක් අසේල සම්පත් හෙළි කරයි

Editor O

Leave a Comment