Trending News

“Health is wealth Day” கிறீன் பாத்தில் – சர்வதேச லயன்ஸ் கழகம் 306 A 1 இன் ஏற்பாடு

(UTV|COLOMBO) – சர்வதேச லயன்ஸ் கழகம்  306 A 1 இனால் ஏற்பாடு செய்யப்படும் Health is wealth Day நிகழ்வானது டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது கொழும்பு 7, கிறீன் பாத் பகுதியில் நடைபெறவுள்ளதுடன்,
இதன்போது ஓட்டப் பந்தயங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும்
நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

களுத்துறையில் இருந்து கொழும்பு வரையான மரதன் ஓட்டப் போட்டி இடம்பெறவுள்ளதுடன், ஆண்களுக்கான 1000 மீற்றர் திறந்த மரதன் ஓட்டப்போட்டியும், தடை தாண்டல் ஓட்டப்போட்டி ஆகியனவும் நடைபெறவுள்ளன. இவற்றுக்கும் மேலதிகமாக குடும்ப உறுப்பினர்கள்
பங்குபற்றக் கூடிய கேளிக்கை போட்டிகளும் அந்நாள் முழுவதும் நடைபெறவுள்ளதுடன், பெரியவர்களுக்கான நடைபோட்டியும் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிகளில் பங்குபெற விருப்பமுடையோர்  0777788413  என்ற இலக்கத்தின் ஊடாக லயன் துஷாந்த பெரேராவை தொடர்புகொண்டு தமது பெயர்களை பதிவு செய்துகொள்ள முடியும். மேலும் கண்புரை நோய்க்கான கண் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன், உடல் நிறை குறியீட்டெண் (BMI) பரிசோதனை, இசை நிகழ்ச்சியுடன் உணவுக் கடைகள் உள்ளிட்ட மேலும் பல பொழுதுபோக்கு களியாட்ட நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன.

Related posts

31, 500 police officers promoted

Mohamed Dilsad

தனிநபர் தகவல்களை சேகரிப்பது குறித்து ஜனாதிபதி அவதானம்

Mohamed Dilsad

Drug prices revised due to Rupee depreciation

Mohamed Dilsad

Leave a Comment