Trending News

சச்சின், சேவாக்கின் சாதனையை முறியடித்த ஸ்மித்

(UTVNEWS | COLOMBO) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை ஆவுஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

அதன்பின்னர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ஒட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் இரட்டைச் சதம் மற்றும் மார்னஸ் லாபுசாக்னேவின் 162 ஓட்டஙகளால் வலுவான நிலையில் உள்ளது. மார்னஸ் லாபுசாக்னேவின் ஆட்டமிழந்த பின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித்

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில், ஸ்டீவ் ஸ்மித் 23 ஓட்டங்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்து 73 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 126 இன்னிங்ஸ்களில் ஸ்மித் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹேமண்ட் 131 இன்னிங்ஸ்களில் 7 ஓட்டங்கள் கடந்ததே சாதனையாக இருந்தது. மேலும் அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவனான் பிராட்மேனின் டெஸ்ட் போட்டிகள் ரன்களையும் (6,996 ஓட்டங்களை) முந்தினார்.

Related posts

பணத்துக்காக 38 வயது பெண்ணை மணந்த அழகிய இளைஞன்!

Mohamed Dilsad

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Athauda Seneviratne, W. B. Ekanayake extends support to Sajith

Mohamed Dilsad

Leave a Comment