Trending News

பிணை மனு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV|COLOMBO) – கைதாகி விளக்கமறியலில் உள்ள தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரால் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைகளை எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(27) தினம் குறித்துள்ளது.

அதன்படி, மனு தொடர்பில் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றில் விடயங்களை முன்வைக்குமாறு அதன் பிரதிவாதிகளுக்கு நீதிபதி அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலைக் குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

India’s NIA arrests key accused attempting to flee via Sri Lanka

Mohamed Dilsad

‘Godfather’ actor Carmine Caridi passes away at 85

Mohamed Dilsad

தாய்லாந்தில் மற்றொரு சோகம் சம்பவம்

Mohamed Dilsad

Leave a Comment