Trending News

இன்று நள்ளிரவுடன் நிறைவு

(UTV|COLOMBO) – கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மீளாய்வுப் பரீட்சைகள் ஆகியன இன்று(26) நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவின் பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பாக 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Neeson, Walsh join “The Honest Thief”

Mohamed Dilsad

Argentina to outline cuts aimed at stabilising Peso

Mohamed Dilsad

Fishermen are advised not to venture into the deep and shallow sea areas

Mohamed Dilsad

Leave a Comment