Trending News

முன்னைய அரசினால் வழங்கப்பட்ட 7000 நியமனங்கள் இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)- ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த சலுகைக் கடன் திட்டங்கள், 7000 பேருக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு புதிய காபந்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திறைசேரி செயலர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, வங்கிகள், அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களில், என்டர்பிரைஸ் சிறிலங்கா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குறைந்தது 11 சலுகைக் கடன்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னைய அரசாங்கத்தின் இறுதிக் காலகட்டத்தில் 7000 பேருக்கு வழங்கப்பட்ட அரச நியமனங்களையும் இடைநிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள்,மற்றும் சிறைச்சாலைகளில் வழங்கப்பட்ட 1300 பேருக்கான வேலை வாய்ப்புகளும் இதில் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

Mohamed Dilsad

களனிவௌி தொடரூந்து வீதிக்கு நாளை முதல் பூட்டு

Mohamed Dilsad

Twelve Persons nabbed over Minneriya issue

Mohamed Dilsad

Leave a Comment