Trending News

வெலிக்கடை போராட்டத்தில் உள்ள சிறைக் கைதிகளுடன் கலந்துரையாடல் இல்லை

(UTV|COLOMBO) – வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 மரண தண்டனையை கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆரம்பித்துள்ள போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அவர்களுடன் கலந்துரையாட வேண்டிய தேவைகள் இல்லை என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரோயல் பார்க் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இவர்கள் கடந்த 11 ஆம் திகதி முதல் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்திருந்தார்.

ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கியது போல் தமக்கும் பொதுமன்னிப்பை வழங்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Elizabeth Debicki joins Chris Nolan’s next

Mohamed Dilsad

Dozens die as Guatemala volcano erupts

Mohamed Dilsad

Investigations into LTTE murder of Rajiv Gandhi still not complete

Mohamed Dilsad

Leave a Comment