Trending News

இந்த வருடத்தில் 64,290 டெங்கு நோயாளர்கள்

(UTV|COLOMBO) – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் 64,290 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நிலவும் பருவ பெயர்ச்சி காலநிலையை அடுத்து கொழும்பு, கம்பஹா, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளதன் காரணமாக நுளம்புகள் உள்ள இடங்களை துப்பரவு செய்வது தொடர்பில் பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

Angelo Mathews returns home due to personal reasons

Mohamed Dilsad

Services at Consular Affairs Division hindered

Mohamed Dilsad

Iran football: Women attend first match in decades

Mohamed Dilsad

Leave a Comment