Trending News

பாராளுமன்றத்தை டிசம்பர் வரை ஒத்திவைப்பதற்கு இணக்கப்பாடு

(UTV|COLOMBO) – பாராளுமன்றத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்களிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையினால் பாராளுமன்றத்தில் கூட்ட மதிப்பு எண்ணுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து சிக்கல் நிலைமை ஏற்படுவதாலேயே
குறித்த இணக்கப்பாடு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எட்டப்பட்டது.

இதற்கமைய, இன்று(07) முற்பகல் 10.30க்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதன்போது, பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பான யோசனை சபை முதல்வரினால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Taking sanitation seriously

Mohamed Dilsad

இமாச்சல பிரதேசத்தில் பலத்த மழை

Mohamed Dilsad

Prisons Dept. not informed on executions

Mohamed Dilsad

Leave a Comment