Trending News

துப்பாக்கிப் பிரயோகம் – எஸ்.பி இனது மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் கைது

(UTV|COLOMBO) – துப்பாக்கிப் பிரயோகம் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்தினை வழிமறித்து சிலர் தடை ஏற்படுத்தியவர்கள் மீது நேற்று(06) இரவு, பாராளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் காயமடைந்து தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கரவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்தில் பேச்சுவார்த்தை

Mohamed Dilsad

தேசிய கால்பந்தாட்ட குழாமிற்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம்

Mohamed Dilsad

புதிய தொழிநுட்பங்களுக்கு ஏற்ப பொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் 

Mohamed Dilsad

Leave a Comment