Trending News

‘தெனுவர மெனிகே’ சேவை ஆரம்பம்

(UTV|COLOMBO) – ‘’தெனுவரா மெனிகே’ எனப்படும் நகர கடுகதி ரயிலானது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை பதுளை நோக்கி தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் ஒவ்வொரு நாளும் காலை 6.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு மாலை 3.27 மணிக்கு பதுளையை சென்றடையும். அதே ரயில் பதுளையிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.03 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதல்தர பெட்டிகளில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கான ரயில் கட்டணம் 1,700 ரூபாவும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு 1,000 ரூபாவும், மூன்றாம் வகுப்பு பெட்டிகளுக்கு 700 ரூபாவும் அறவிடப்படுகிறது.

குறித்த ரயில் பொல்ஹாவல, ரம்புக்கனா, பேராதெனிய, கண்டி, கம்பளை, நாவலபிட்டியா ஹட்டன், தலவாக்கலை, நானு ஓயா, அம்பேவளை, பட்டிபோலா, அப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை, எல்ல, தேமோதரை மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Death toll rise in Japan quake

Mohamed Dilsad

Pearce to replace Sheen in “Bloodshot”

Mohamed Dilsad

இமயமலைக்கு ஏற்படப் போகும் பேரழிவு?

Mohamed Dilsad

Leave a Comment