Trending News

பீட்ருட் வடை எப்படி செய்யலாம்?

(UTV|COLOMBO) – நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற விட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது.

அந்தவகையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான பீட்ருட் வடையை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பருப்பு – 1/4 கப்
கடலை பருப்பு – 1/2 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 5
சோம்பு – 1/2 தேக்கரண்டி
கல் உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறிய துண்டு
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
பீட்ருட் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.
துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சுத்தமாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

பருப்பு வகைகள் நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு, அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.

பிறகு அரைத்த மாவை ஒரு பௌலில் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, நைசாக துருவிய பீட்ருட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய சிறிய வடையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Related posts

Jennifer Aniston has days when she doesn’t want to step out

Mohamed Dilsad

கேரள கனமழை-இந்தியன் வங்கி ரூ.4 கோடி நிதியுதவி

Mohamed Dilsad

அப்துல்லாஹ் – ரணில் சந்திப்பு

Mohamed Dilsad

Leave a Comment