(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான தனியார் துறையில் தொழில்புருவோருக்கு விடுமுறை வழங்குவது தொடர்பிலான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தொழில்புரியும் இடத்திலிருந்து 40 கிலோமீற்றர் அல்லது அதற்கு குறைவான தூரத்தில் வசிக்கும் சேவையாளர்களுக்கு வாக்களிப்பதற்காக அரைநாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
40 தொடக்கம் 100 கிலோமீற்றர் தொலைவுக்குள் வாக்களிப்பு நிலையங்கள் காணப்படுமாயின் அவர்களுக்கு முழுநாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
மேலும், 100 தொடக்கம் 150 கிலோமீற்றர் தொலைவில் வசிப்போருக்கு ஒன்றரை நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தொழில் புரியும் இடத்திலிருந்து 150 கிலோமீற்றருக்கும் அதிக தூரத்தில் வசிக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
