Trending News

பாகிஸ்தானில் கடுகதி ரயிலில் தீ – 16 பயணிகள் உடல் கருகி பலி

(UTV|COLOMBO) – பாகிஸ்தானின், லியாகத்ப்பூர் நகருக்கருகே இன்று(31) காலை பாகிஸ்தானில் கராச்சி – ராவல்பிண்டிக்கு தேஜ்காம் கடுகதி ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 16 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றான்.

குறித்த ரயில், லியாகத்ப்பூர் அருகே இன்று அதிகாலை வந்தபோது, ஒரு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ, அடுத்தடுத்தப் பெட்டிகளுக்கும் பரவியது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்த தீ விபத்தில் 16 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலில் பயணித்த பயணியொருவர் கொண்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Four dead in small plane crash near Dubai airport

Mohamed Dilsad

Aung San Suu Kyi denies Rohingya ethnic cleansing

Mohamed Dilsad

கொழும்பில் ஓமான் நாட்டின் 47ஆவது தேசிய தின நிகழ்வு

Mohamed Dilsad

Leave a Comment