Trending News

பக்கச் சார்பான ஊடகங்களை நாட்டு மக்கள் நிராகரிக்க வேண்டும்

(UTV|COLOMBO) – ஒரு கட்சியின் வேட்பாளரை மாத்திரம் சில சுயலாபங்களை அடிப்படையாகவைத்து பக்கச் சார்பாக ஆதரிக்கும் ஊடகங்களை நாட்டு மக்கள் நிராகரிக்க வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நிதி அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த கால அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கம் அவர்களை வெள்ளை வேன் அனுப்பி கடத்த மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அவர்களது ஊடக நிறுவனங்களை தீயிட்டு கொழுத்தாது என்றும் ஊடகவியலாளர்களைக் கொலை செய்யவும் மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

Sumithra Peiries identifies Ranamayura award

Mohamed Dilsad

Honduras candidate rejects poll count

Mohamed Dilsad

ராஜஸ்தானில் கூடாரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment