Trending News

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இன்று(26)

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இன்று(26) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்தப் பணிகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை அஞசல் அலுவலகங்கள் ஊடாக இடம்பெற உள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் மாதம் 3 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில், அனைத்து வாக்காளர்களும், தங்களது வீடுகளில் இருந்து, வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அஞ்சல்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த மாதம் 9ஆம் திகதியாகும்போது, வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாவிட்டால், உரிய வாக்காளர்கள், அருகிலுள்ள அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று, தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளுமாறும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“Pakistani people have a friendly image on Sri Lanka” – Envoy

Mohamed Dilsad

Lane laws nets over 1,000 motorists

Mohamed Dilsad

හිටපු යුද හමුදාපතිට උසස් වීමක්

Mohamed Dilsad

Leave a Comment