Trending News

51 மாணவர்கள் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) – பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 51 மாணவர்களும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இவர்களை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு மாணவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹபொல புலமைப்பரிசில் தவணைத்தொகையை அதிகரித்தல், மஹபொல கொடுப்பனவின்போது குறைவாக நிதி வழங்கலை நிறுத்தல், காலதாமதம் இன்றி கொடுப்பனவுகளை வழங்கல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது, நீதிமன்ற உத்தரவுகளை மீறுதல், தேர்தல் சட்டங்களை மீறுதல், பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Dengue eradication programme from tomorrow

Mohamed Dilsad

පූජිත් හා හේමසිරිට එරෙහි පාස්කු නඩුව යළි කැඳවීමට ශ්‍රේෂ්ඨාධිකරණය තීරණය කරයි

Editor O

ACMC to involve in Kalmunai issue

Mohamed Dilsad

Leave a Comment