Trending News

அநுராதபுரம் வீதியில் வாகன விபத்து – மூவர் பலி

(UTV|COLOMBO) -புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மடு தேவாலயத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Investors more bullish on UAE’s economy compared to other global markets

Mohamed Dilsad

மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Netanyahu, in UN speech, claims secret Iranian nuclear site

Mohamed Dilsad

Leave a Comment