Trending News

பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்

(UTV|COLOMBO) – டென்மார்க்கில் 720 டன் எடைகொண்ட கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடைப்ற்றேதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில் 120 ஆண்டுகள் பழமையான ‘ரப்ஜெர்க் நியூடு’ என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இந்த நிலையில் மணல் அரிப்பு காரணமாக இந்த கலங்கரை கடலில் விழும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் கடலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த கலங்கரை விளக்கம், மணல் அரிப்பு காரணமாக தற்போது 2 மீட்டர் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனவே இந்த கலங்கரை விளக்கத்தை சேதப்படுத்தாமல், அப்படியே பெயர்த்து எடுத்து நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் வைக்க டென்மார்க் அரசு முடிவு செய்தது.

அதற்காக 7½ லட்சம் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

[UPDATE] Nominations for Local Government Elections to be accepted from Dec. 11

Mohamed Dilsad

இன்றைய தங்க நிலவரம்

Mohamed Dilsad

වැඩබලන නීතිපතිවරයයෙක් දිවුරුම්දෙයි.

Editor O

Leave a Comment