Trending News

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 1134 முறைப்பாடுகள் பதிவு

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 1134 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4 மணிவரையிலான 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 100 முறைப்பாடுகள் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1087 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 39 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர்கள் பலர் காயம்

Mohamed Dilsad

காலநிலையில் மாற்றம்…

Mohamed Dilsad

உலக பாரம்பரிய ஷூரி அரண்மனையில் தீ விபத்து

Mohamed Dilsad

Leave a Comment