Trending News

விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற 7 பேர் மலேசியாவில் கைது

(UTV|COLOMBO) – தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) தொடர்பிலிருந்த சந்தேகத்தின்பேரில் ஏழு பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனவும் சர்வதேச செய்திகள் மேற்கோள்காட்டி தெரிவிக்கின்றனர்.

மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, கோலாலம்பூர், பேராக் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும், சிலாங்கூரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மலாக்கா மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், சிரம்பான் ஜெயா பாராளுமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோர் அவர்களுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

“தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சில காலமாகவே கண்காணிக்கப்பட்டு வந்தனர்,” என தகவல் அறிந்த ஒரு தரப்பு “த ஸ்டார்” செய்தித்தாளிடம் தெரிவித்ததாக மேலும் கூறப்படுகின்றது.

Related posts

UN torture prevention body to visit Sri Lanka today

Mohamed Dilsad

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

Mohamed Dilsad

Ice Rain in Mullaitivu

Mohamed Dilsad

Leave a Comment