Trending News

நாட்டிற்கு கிடைக்கும் சமுத்திரவியல் நன்மைகளை இந்தியா ஈட்டிக் கொள்ளும் அபாயம் – சாகல [PHOTOS]

(UTVNEWS | COLOMBO) – கிழக்கு முனையத்தை விரைவாக அபிவிருத்தி செய்யவில்லையாயின் கொழும்பு துறைமுகம் சமுத்திரவியல் போட்டித் தன்மையூடாக கிடைக்கும் நன்மைகளை ஈட்டிக்கொள்ள இயலாதெனவும் இந்தியாவே இதன் நன்மைகளை அடைந்து கொள்ளுமெனவும் பிரதம அமைச்சர் அலுவலக பிரதானி, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

சர்வதேச சமுத்திரவியல் தினத்தையொட்டி துறைமுகங்கள் மற்றும் கப்பற் சேவை தொடர்பில் பாடசாலை மாணவர்களை தெளிவூட்டும் நிகழ்வு இன்று(27) மஹாபொல துறைமுகம் மற்றும் சமுத்திரவியல் கற்கை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

“80’களில் நாம் கொள்கலன்கள் செயற்பாட்டினை ஆரம்பித்தோம். பூகோள ரீதியில் நம் நாட்டின் அமைவிடம் இச்செயற்பாட்டிற்கு மாபெரும் ஊந்துக்கோளாக அமைந்தது. கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 31ம் நாள் அளவில் 07 மில்லியன்கள் அதாவது ரூபாய். 70 இலட்சம் வருமானத்தை ஈட்டிக் கொண்டோம். இது மாபெரும் சாதனையாகும். இச்சாதனையுடன் கொள்கலன்கள் செயற்பாட்டினை முன்னெடுக்கும் நாடுகளில் நாம் 22ம் நிலைக்கு உயர்ந்ததுடன், இலகுவில் தொடர்புகொள்ளல்களை மேற்கொள்ளும் துறைமுகம் என்றவகையில் 11ம் நிலைக்கும் உயர்ந்துள்ளோம்.
இவ்விரண்டு காரணிகளையும் இணைத்து 07 மில்லியன்கள் கொள்கலன்களை கையாண்டு சாதனையை புரிந்த போதிலும் அவற்றுள் சிறுதொகை கொள்கலன்கலே உள்நாட்டு தேவையின் பொருட்டு வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றது. இது வெறுமனே 19 % வீதமாகும். 81 % வீதமான கொள்கலன்கள் இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் மற்றுமொரு கப்பலிற்கு மீள் ஏற்றப்படுகின்றது. …” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ImageImageImage

Related posts

நாளாந்தம் 500-600 டெங்கு நோயாளர்கள் பதிவு

Mohamed Dilsad

குளம் உடைந்து நீரில் காணமல் போன அறுவர் மீட்பு

Mohamed Dilsad

Army to build two Dengue wards in less than 10 days

Mohamed Dilsad

Leave a Comment