Trending News

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTVNEWS|COLOMBO) – மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மற்றும் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

European Parliament opens amid protest and discord

Mohamed Dilsad

ඇසල පෙරහැර අගෝස්තු 12 වෙනිදා ඇරඹීමට සියල්ල සුදානම්

Mohamed Dilsad

නාමල් රාජපක්ෂ පොහොට්ටුවෙන් යළි පාර්ලිමේන්තුවට

Editor O

Leave a Comment