Trending News

தேர்தல் பிரச்சாரம்: கோத்தாவின் பாதுகாப்பிற்கு யோசிதவினால் தொண்டர் குழு

(UTVNEWS | COLOMBO) – கோத்தபாய ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்கென தொண்டர் குழுவொன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தீர்மானித்துள்ளது.

இந்த தொண்டர் குழுவில் பாதுகாப்பு படையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் விலகியவர்களை உள்வாங்கி குறித்த குழு உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது கோத்தபாய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு பிரிவிற்கு உதவுவதே இவர்களின் பணி என அவர் தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ச இந்த தொண்டர் படையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

அருங்காட்சியகமாக மாறப்போகும் தாய்லாந்து குகை

Mohamed Dilsad

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண மருத்துவர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Sri Lanka targets 450,000 Indian tourists in 2018

Mohamed Dilsad

Leave a Comment