Trending News

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு 2,000 விண்ணப்பங்கள்

(UTVNEWS|COLOMBO ) – இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே, புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்ததனைத் தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் ஜெயவர்தனா, டொம் மூடி (ஆஸ்திரேலியா), மைக் ஹசன் (நியூசிலாந்து) உள்ளிட்டோர் பயிற்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், களத்தடுப்பு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்திய கிரிக்கெட் நிறுவன (பி.சி.சி.ஐ.,) தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பயிற்சியாளர் யார் என்பது முடிவு செய்யப்படலாம். தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தெரிவாக அதிகம் வாய்ப்புள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும்

Mohamed Dilsad

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment