Trending News

இலங்கையின் புதிய வரைபடம் எப்படி ..! (படம் இணைப்பு)

(UTVNEWS | COLOMBO) -இலங்கையில் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார்.

இறுதியாக இலங்கையில் வரைபடம், 1995ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வரைபடத்தில், துறைமுக நகரம் உள்ளிட்ட 25 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்து மாற்றங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறினார்.

புதிய வரைபடத்தில் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹகந்த நீர்த்தேக்கம் உள்ளிட்டவை புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வரைபட தயாரிப்பு பணி மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டது. தற்போது அதனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என நில அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார். .

Related posts

Mawanella SLFP Organiser arrested

Mohamed Dilsad

Malinga to retire from cricket after T20 World Cup

Mohamed Dilsad

IPL games have atmosphere similar to Barcelona-Atletico Madrid fixture – Rahul Dravid

Mohamed Dilsad

Leave a Comment