Trending News

பிச்சைக்காரர்களிடம் சிக்கிய பிரபல நடிகை (video)

(UTVNEWS | COLOMBO) -பிரபல நடிகை ஒருவர் பிச்சைக்காரர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டு தவியாய் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் ஷாப்பிங் செய்ய கடை ஒன்றுக்கு சென்ற ரகுல் பிரீத் சிங், ஷாப்பிங்கை முடித்துவிட்டு காரில் ஏற வந்தார். அப்போது அங்கு நின்ற சில பிச்சைக்காரர்கள் கூட்டமாக ரகுலை முற்றுகையிட்டு பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரகுல் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார். அவர்களிடம் இருந்து மீண்டு வரமுடியாமல் தவித்த ரகுலின் தர்மசங்கடமான நிலையை பார்த்தவர்கள் வேகமாக ஓடிவந்து அவரை பிச்சைக்காரர்களிடமிருந்து மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவுகிறது.

Related posts

ඡන්දේ දාන්න නිවාඩු ලැබෙන විදිය

Editor O

Alexander Krushelnitsky subject of anti-doping case

Mohamed Dilsad

Lanka Sathosa to reach 400 branches milestone

Mohamed Dilsad

Leave a Comment