Trending News

ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிலிருந்து விலக தீர்மானம்

(UTV|COLOMBO) – சட்ட ஆலோசனைக்கு அமைய 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சேவையாளர்களின் உரிமைகளை நிறைவேற்றாது புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியமைக்கு எதிராக தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே இன்று(03) காலை 10.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

Take action against Dengue

Mohamed Dilsad

හිටපු ජනාධිපති රනිල්ට ඇප

Editor O

கஜ சூறாவளி – யாழ்குடாநாட்டில் அடைமழை

Mohamed Dilsad

Leave a Comment