Trending News

கூகுள் மேப் காட்டிய தவறான குறுக்குப் பாதையால் ஒரே இடத்தில் குவிந்த 100 கார்கள்

அமெரிக்காவின் கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வேர் சர்வதேச விமான நிலையம் செல்ல, வெவ்வேறு இடத்தில் இருந்துக் கொண்டு சிலர் கூகுள் மேப்பின் உதவியை நாடியுள்ளனர்.

அவர்களுக்கு கூகுள், குறைந்த நேரத்தில் விரைவில் விமான நிலையம் அடைய குறுக்குப் பாதையை காட்டியுள்ளது. குறைந்த நேரத்தில் செல்லும் என்பதால் 100 பேர் இதனை பின்தொடர்ந்து காரில் சென்றுள்ளனர்.

இந்த பாதை மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. இருப்பினும் சென்றுள்ளனர். ஒரு இடத்தில் 100 கார்களும் போக வழியின்றி சிக்கியுள்ளன. பின்னர்தான் தெரிந்தது தவறான பாதை என்று.

இது குறித்து அங்கு வந்திருந்த மான்சிஸ் கூறுகையில், ‘கணவரை அழைக்க விமான நிலையம் வருவதற்காக கூகுள் மேப்பில் குறைந்த நேரத்தில் செல்லக்கூடிய பாதையை தேடினேன். இந்த பாதையை தான் காட்டியது. இங்கு வந்து பார்த்தால் என்னைப்போல் 100 கார்கள் நிற்கின்றன. கடைசியாகத்தான் தெரிந்தது. தவறான பாதை என்று’ என கூறினார்.

குறித்த இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், ‘கூகுள் மேப்பில் ஒரு வழியை தேர்வு செய்து காட்டும்போது, சாலையின் அளவு மற்றும் அந்த பாதையில் பயணிக்கும் நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்துதான் காட்டுவோம். சில நேரங்களில் இப்படி நடக்கிறது’ என கூறியுள்ளது.

 

 

Related posts

சவுதியில் இலங்கைப் பெண் சுட்டுக் கொலை

Mohamed Dilsad

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்

Mohamed Dilsad

ප්‍රවාහනය ට අදාළව අතිවිශේෂ ගැසට් නිවේදනයක්

Editor O

Leave a Comment