Trending News

திட்டமிட்டபடி புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில்

(UTV|COLOMBO) திட்டமிட்டபடி ​நேற்று (27) நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இன்று நள்ளிரவு வரை அடையாள பணிப் புறப்பணிப்பில் ஈடுபடுவதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனை முறையாக நடைமுறைப்படுத்து ஒருமாத கால அவகாசம் தேவை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

 

 

 

Related posts

A two day dengue eradication program from today

Mohamed Dilsad

Regional Consular Office of Foreign Ministry to be opened in Jaffna

Mohamed Dilsad

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்

Mohamed Dilsad

Leave a Comment