Trending News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் மேற்கொண்டுள்ள தீர்மானம்…(UPDATE)

(UTV|COLOMBO) சிறிலங்கா சுதந்திர கட்சி மேற்கொள்ளும் தீர்மானத்தில் அடிப்படையிலேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தாம் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகப்பிரதானிகளுடன் சற்று முன்னர் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேநேரம்  நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கு 19ம் திருத்தச் சட்டமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர் நாட்டை நேசிப்பவராக இருந்தால் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நீக்கப்படுமாக இருந்தால் அதுவே நாட்டுக்கு சிறந்தது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேற்படி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

 

Related posts

தேசிய காப்புறுதி நிதியம் இழப்பீடு

Mohamed Dilsad

“Street food has been my favourite” – Meera Deosthale

Mohamed Dilsad

“No gender difference in Bollywood” – Farah Khan

Mohamed Dilsad

Leave a Comment