Trending News

27 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பஸ்கள்

(UTV|COLOMBO) பொது போக்குவரத்து துறையின் பிரதான திருப்பு முனையாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பஸ்கள் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்பட இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தற்சமயம் ஒன்பது பஸ் வண்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 37 பஸ் வண்டிகள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளன.

இதன்படி ஒரு பஸ்ஸின் பெறுமதி 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். கட்டுபெத்த, மஹரகம, பொலன்னறுவை, மாத்தளை பஸ் சேவை நிலையங்களில் இந்த பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

 

 

 

Related posts

Ashes series hit by ‘fixing’ bomb – [VIDEO]

Mohamed Dilsad

சஜித்தை வெல்லச் செய்வதன் மூலமே அடக்குமுறையை தகர்த்தெறியமுடியும்

Mohamed Dilsad

මැතිවරණ කොමසාරිස් ලෙස රසික පීරිස් වැඩ බාර ගනී

Editor O

Leave a Comment