Trending News

இங்கிலாந்து அணிக்கு இமாலய வெற்றி

(UTVNEWS | COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில், இங்கிலாந்து அணி, 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் சவுதம்டனில், உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் 19 ஆவது போட்டியாக இந்தப் போட்டி இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 44.4 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 33.1 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்திருந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டியது.

இதேவேளை, இன்றைய தினம் உலகக் கிண்ணத் தொடரில் 2 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டி, பிற்பகல் 3 மணிக்கு லண்டனில் இடம்பெறவுள்ளது.

இதேநேரம், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி, மாலை 6 மணிக்கு கார்டிப்பில் ஆரம்பமாக உள்ளது.

Related posts

புத்தளத்தில் பயணப்பையால் இரவு முழுவதும் பதட்டம்!!

Mohamed Dilsad

5 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி

Mohamed Dilsad

17 இந்திய மீனவர்கள் கைது

Mohamed Dilsad

Leave a Comment