Trending News

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆழம் கூடிய கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

Related posts

அரசியல் நோக்கங்களுக்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அரசியல்வாதிகள் விடயத்தில் மக்கள் சரியான ஒரு தீர்ப்பை வழங்குவார்கள் – முன்னாள் அமைச்சர் ரிஷாட்

Mohamed Dilsad

Tesla delivers its first ‘Made in China’ cars

Mohamed Dilsad

April 15 declared a Govt. holiday

Mohamed Dilsad

Leave a Comment