Trending News

சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் “சுமூகமான முடிவுக்கு மக்கள் காங்கிரஸ் ஆதரவு”- அமைச்சர் ரிசாத் பதியுதீன்

(UTV|COLOMBO) சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் சமூகமான முடிவுகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நேற்று (26) நடைபெற்ற சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற கோரிக்கை தொடர்பிலான உயர்மட்ட மாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

”அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,  இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், உட்பட அக்கட்சியின் எம்.பி நசீரும், எமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் உட்பட நானும் இந்த உயர்மட்ட மாநாட்டில் கலந்துகொண்டு நீண்ட நேரம் பேச்சுக்கள் நடத்தினோம்.”

”எதிர்காலத்தில் பிரச்சினை இல்லாமல், அந்த பிரதேச மக்கள் சுமூகமாக வாழ வேண்டும் என்பதே எமது மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடாகும். இந்த கலந்துரையாடலின் போது, அமைச்சர் வஜிர அபேவர்த்தன நல்ல பல ஆலோசனைகளை முன்வைத்தார். அவரின் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு விரைவில் இதற்கான ஒரு நல்ல முடிவை மேற்கொள்ள முடியுமென என நம்புகின்றோம்.” இவ்வாறு அமைச்சர் ரிசாத் தெரிவித்தார்.

 

 

(ஊடகப்பிரிவு)

 

 

 

Related posts

Special train services for Poson season

Mohamed Dilsad

சீரற்ற காலநிலை காரணமாக நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

Mohamed Dilsad

චන්ද්‍රයාගේ අලුත්ම ඡායාරූප

Mohamed Dilsad

Leave a Comment