Trending News

ஒரே பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகள்..!

(UTV|IRAQ) ஈராக் பெண்ணுக்கு ஒரே சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்தவர், யுசுப் பத்லே. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவரது 25 வயது மனைவி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன், அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே, ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்காவில் இயோவா மாகாணத்தை சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்தன.

கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என 6 குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Related posts

பாரிய ஊழல், மோசடிகளைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Mohamed Dilsad

இணையதளத்தில் ஹாட்டான டாப்பிக்காக பேசப்படும் பிரபல நடிகை!இதுவா காரணம்?

Mohamed Dilsad

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் வேண்டுகோள்

Mohamed Dilsad

Leave a Comment